காங்கிரஸ் உயிர்ப்புடன் உள்ளதா?

காங்கிரஸ் உயிர்ப்புடன் உள்ளதா? நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய உத்தரப் பிரதேசம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பெண்ணின் உடலை குடும்பத்தினர் கூட இறுதி சடங்குகள் செய்யவிடாமல் தடுத்து நிறுத்தி, காவல்துறையினரே அப்பெண்ணின் உடலை அவசரகதியில் எரித்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் தடுத்து நிறுத்தியது மட்டுமல்லாமல் ராகுலை பிடித்து கீழே தள்ளி அட்டகாசம் செய்தது யோகி தலைமையிலான உத்திரபிரதேச அரசு. அதன்பின் போலீஸார் ராகுல், பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் பிரமுகர்களைக் கைது செய்து சில மணி நேரத்துக்குப் பின் விடுவிக்கப்பட்டிருந்தாலும் ராகுல் காந்தி, பிரியங்கா உள்பட காங்கிரஸார் 200 பேர் மீது தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் கவுதம் புத்தாநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் எம்.பி. ராகு...