புதுச்சேரி மாநில அந்தஸ்தும் என்.ஆர்.காங்கிரஸின் நாடகமும்!


மாநில அந்தஸ்தும் என்.ஆர்.காங்கிரஸின் நாடகமும்!

அகில இந்திய என்ஆர் காங்கிரஸ் கட்சியின் 11-ம் ஆண்டு தொடக்க விழா ஈசிஆர் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் பிப். 7 கொண்டாடப்பட்டது. இதில் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான ரங்கசாமி கலந்து கொண்டு பேசியவர், மாநில அந்தஸ்துக்காக தேர்தலைப் புறக்கணிக்க நாங்கள் தயார் நீங்கள் தயாரா என அனைத்து கட்சிகளுக்கும் சவால் விடுத்தார்.

மாநில அந்துஸ்துக்காக டெல்லி சென்று மத்திய அரசை வலியுறுத்த வருமாறு ரங்கசாமிக்கு சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமியும்  அழைப்பு விடுத்தார்.  மாநில அந்தஸ்து பெறும் வரை புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை அனைத்து கட்சியினரும் புறக்கணிக்க முன்வந்தால் புதுச்சேரி மக்களின் நலனிற்காக திமுக தலைவரின் அனுமதியுடன் அதில் திமுகவும் பங்கேற்கும். திமுக அமைப்பாளர் சிவா எம்எல்ஏ தெரிவித்தார்.

தேர்தல் புறக்கணிப்பில் உடன்பாடில்லை எனவும் இது குறித்து அதிமுக தலைமை தான் முடிவு செய்யும் எனவும் எதிர்கட்சி தலைவரின் கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து எனவும் என் ஆர் காங்கிரஸ் கூட்டணி கட்சியான அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் கருத்து தெரிவித்துள்ளார்.

2016 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் போது மாநில அஸ்தஸ்தை குறித்து பத்தோடு பதினொன்றாக அறிக்கைவிடுத்த ரங்கசாமி அவர்கள் மத்தியில் இருந்த மோடியின் அரசை எதிர்த்து புதுவையில் ஆளும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இடதுசாரிகள், சிறுபான்மை கட்சியினர் என அனைத்து கட்சிகளும் டெல்லி வரை சென்று போராட்டம் நடத்திய போதும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக எதிலும் கலந்துக் கொள்ளவில்லை! புதுச்சேரி கட்சிகளின் போரா்டத்துக்கு ஆதரவும் தெரிவிக்கவில்லை! சட்ட போராட்டங்களையும் முன்னெடுக்கவில்லை.

2019 மக்களவை தேர்தல் மற்றும் இடை தேர்தலின் போதும் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் போதும் மாநில அந்தஸ்தை வலியுறுத்தி பாஜகவிற்கு எவ்வித நெருக்கடியும் கொடுக்கவில்லை. 2021ல மட்டும் மாநில அந்தஸ்தை பற்றி ஏன் பேச வேண்டும்? பாஜகவுடன் கூட்டணியை முறிக்க முயல்கிறதா என்.ஆர்.காங்கிரஸ்? ஒரு உரையில் இரு கத்திகள் சாத்தியமில்லை தானே! 

புதுச்சேரி சட்டமன்றத்தில் இதுவரை 11 முறை புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக, அதிமுக, பாமக ஆகிய கட்சிகளை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஓ. ஹெச். ஃபாரூக், ஆர்.விஸ்வநாதன், வி.வைத்திலிங்கம்,

ஆர்.வி. ஜானகிராமன், க.நடராசன், எஸ்.அரசி, பா.சண்முகம், அனிபால் கென்னடி, பே.ராஜவேலு, எஸ்பி.சிவக்குமார், ஆ.அன்பழகன், ஆர்.கே.ஆர் அனந்தராமன், ஏ.எம்.எச்.நாஜிம், நாரா கலைநாதன்

ஆகியோர் சட்டப்பேரவையில் உறுப்பினர்களாக இருந்த போது மாநில அந்தஸ்துக்கான தீர்மானத்தை முன்மொழிந்து இருக்கிறார்கள். மாநில அந்தஸ்துக்காக என்.ஆர்.காங் எம்.பிக்கள் ராதாகிருஷ்ணன் மற்றும் கோகுலகிருஷ்ணன் மத்தியில் தனிதபர் மசோதாவை கூட தாக்கல் செய்யல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்று மாநில அந்தஸ்து வேண்டிதான் என் ஆர் காங்கிரஸ் துவங்கப்பட்டது என்று சொல்லும் திரு.ரங்கசாமி ஆளும் கட்சியாக இருக்கும்போதோ எதிர்க்கட்சியாக இருக்கும்போதோ மாநில அந்தஸ்து காண தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றவில்லை. மாநில அந்தஸ்து என்ற பெயரில் சட்ட போராட்டங்களையும் முன்னெடுக்கவில்லை. 10 ஆண்டுகாலம் பாஜகவின் கூட்டணியிலிருந்து விட்டு இன்று தேர்தல் வரும் சமயத்தில் பாஜகவை எதிர்த்து புதுச்சேரி மாநில அந்தஸ்துக்காக தேர்தலைப் புறக்கணிப்போம் வாருங்கள் என அனைத்து கட்சியையும் அழைத்திருப்பது தேர்தல் நாடகம் தானே!

என். ஆர். காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக திரு. ரங்கசாமி இருந்தபோது, மாநில அந்தஸ்து கேட்டு, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, அப்போது குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜியிடம் அளித்தார். அப்போது மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசின் இணை அமைச்சராக, திரு. நாராயணசாமி அவர்கள் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்று மாநில அந்தஸ்தை பற்றி காங்கிரஸ் பெரிதாக எடுத்துக்கொள்ளாததால் இன்று மாநில உரிமைகளுக்காக வீதியில் இறங்கி போராடும் நிலை உருவாகியுள்ளது. 

தற்போது, சிறப்பு மாநில அந்தஸ்திற்கான அவசியத்தையும் தேவையையும் காங்கிரஸ் புரிந்து கொண்டுள்ளது. ஆளுநருக்கான அதிகப்படியான அதிகாரப்பரவலை எதிர்த்து போராட துவங்கியது. சட்ட ரீதியாகவும், அறப்போராட்டங்கள் வாயிலாகவும் புதுச்சேரி உரிமைகளை மீட்க காங்கிரஸ் போராடி வருவதை வேடிக்கை பார்த்து ஏளனம் செய்யும் என்.ஆர்.காங்கிரஸின் நாடித்துடிப்பை மக்கள் அறிவர்! மாநில உரிமைகளை சிதைக்கும் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறுவாரா ரங்கசாமி?

Tr Gayathri Srikanth / Written on Feb 09, 2021

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நீயும் அயலி! நானும் அயலி!

தாலி இழவிற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது?

புதுச்சேரி கலைமாமணி விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெண் ஆளுமைகள் புறக்கணிப்பு?!