சூது கவ்வும்!

சூலை 15, 2019 அன்று எழுதப்பட்டது. காங்கிரஸ் கூட்டணியின் மீது கிரண்பேடியின் செயல்படுகளால் 

ஏற்படவிருக்கும் தாக்கதத்தை தேர்தலுக்கு முன்பே கணித்து எழுதியது:





புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த நாள் முதல் உட்கட்சி பூசல்கள், சட்டமன்ற தேர்தல், துணை நிலை ஆளுநரின் கெடுபிடிகள், பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்களின் நியமனம், பாராளுமன்ற தேர்தல், இடைத் தேர்தல், ரேசன் அட்டைகளுக்கு இலவச அரிசி போட முடியாமை என பல நெருக்கடிகளை சமாளித்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

துணை நிலை ஆளுநரின் வரையருக்கப்படாத அதிகாரங்களால் புதுச்சேரி அரசாங்கத்தை பல முறை கதறவிட்டிருக்கிறார். ஜனநாயகத்தை உயிர்ப்பிக்க தர்ணா போராட்டங்களும், டெல்லிக்கு சென்று போராடியும், சட்டப் போராட்டங்களை தொடர்ந்து, மக்களதிகாரத்தை காப்பாற்றியிருக்கிறது புதுச்சேரி காங்கிரஸ் கட்சி!

எதிர்கட்சிகளின் ஆதரவின்றி, புதுச்சேரி மாநில உரிமையை மீட்டெடுக்க புதுவை அரசு பாஜக என்னும் பாசிச கும்பலை எதிர்த்து போராடி வெற்றி கண்டுள்ளது. ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்’ என்ற வரிகளுக்கேற்ப புதுவை மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கே என புதிய வரலாற்றை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது சவாலான அரசியல் சூழ்நிலையில், ஆளும் கட்சி நிதி நெருக்கடிகளை சமாளித்து அனைத்து துறைகளிலும் நிலுவையிலுள்ள பணிகளை விரைந்து முடிப்பார்களா? காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் இந்த குறுகிய காலக் கட்டத்தில் செய்து முடிப்பார்களா என்று பல கேள்விகள் மக்கள் மன்றத்தில் உள்ளது.

கர்நாடகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழ்நிலையை பார்க்கும் போது, புதுச்சேரியிலும் அப்படி ஒரு சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகாரமும் பணபலத்தையும் வைத்துக் கொண்டு ஜனநாயகத்தை கூறு போட்டு விற்றுக் கொண்டிருக்கிறது மத்தியில் ஆளும் பாஜக!

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, யானம் என நான்கு பிரதேசங்களும் சமமான வளர்ச்சியை பெற, நிலுவையிலுள்ள சம்பளங்கள் வழங்க, பஞ்சாலைகளை செயல்பட வைக்க, அனைத்து மக்களுக்கும் இலவச அரிசி கிடைக்கப் பெற, காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்பவும், பொது மக்களின் குறைகளை விரைந்து முடிக்க சீறிய முயற்ச்சிகளை புதுச்சேரி அரசாங்கம் முனைப்புடன் செயல்படுத்த வேண்டும்.

மக்கள் பிரச்சனைகளை உடனடியாக அரசு அக்கறை கொள்ளாவிடில், அடுத்த தேர்தலில் எதுவும் நடக்கலாம், மக்கள் விரும்பும் அரசாக புதுச்சேரி அரசு செயல்படாவிடில், மக்களின் அதிருப்தி காரணமாக புதிய அரசியல் திருப்பங்களை புதுச்சேரி அரசியலில் எதிர்ப்பார்க்கலாம். மக்கள் சேவையே மக்கள் கொடுத்த பதவியை தக்க வைக்கும் ஒரே சூட்சமம் புரியாமல் போனால் ஆளும் அரசை ‘சூது கவ்வும்’.

Tr Gayathri Srikanth

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நீயும் அயலி! நானும் அயலி!

தாலி இழவிற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது?

புதுச்சேரி கலைமாமணி விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெண் ஆளுமைகள் புறக்கணிப்பு?!