பாரத பிரதமர் மோடியை பதவி விலக கோரி #ResignModi ஹாஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங்!
பாரத பிரதமர் மோடியை பதவி விலக கோரி #ResignModi ஹாஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங்! நாடு முழுவதும் 2020ல் கொரோனா தொற்று வேகமாக பரவி கொண்டிருந்த போது இந்தியா மெத்தனமாக நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் துவங்கியிருந்த காலகட்டத்தில் தப்லீக் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்தவர்களால்தான் வைரஸ் நாடு முழுவதும் பரவியது போல பலவிதமாக செய்திகள் திட்டமிட்டே பரப்பியது காவி கும்பல். பலர் கைது செய்யப்பட்டார்கள். வெறுப்பை உமிழும் வகையில் ஆதாரமில்லா காணொளிகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது.
"தேசிய பேரிடர் மேலாண்மை என்று வரும்போது இதன் அதிகாரம் பரவலானது. அதன் தலைவர் பிரதமர் மோடி ஆவார். ஜனநாயக முறைப்படி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் எதையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக மார்ச் 24, 2020ல் திடீர் பொது முடக்கம் அறிவித்தார் மோடி. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற தவறான பொருளாதார கொள்கைகளால் இந்திய ஏழை, எளிய, சாமனிய நடுத்தர குடும்பங்கள் பெருந்துன்பத்திற்க்கும் பொருளாதார நெருக்கடிக்கும் ஆளானார்கள். வெளி மாநில தொழிலாளர்கள் நடந்தே ஊர் சென்றார்கள். அதில் சாலை விபத்துகளில் 29,415 பேர், 110 பேர் ரயில் நிலைய மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பசியாலும் பலர் உயிரிழந்தார்கள். கொரோனா முன்கள வீரர்களை பாராட்டும் வகையில் வீட்டின் வாசலில் நின்று கை தட்டியும், நாடு சுபிட்சம் பெற வேண்டி வாசலில் விளக்கேற்ற சொன்னார் மோடி. ஆனால் கொரோனா குறித்த விழிப்புணர்வு இல்லாததால் மக்கள் அதனை விழா போல கொண்டாடினர்.
இதற்கிடையில் கொரோனாவை குணப்படுத்த பாபிஜி அப்பளம், கோமியம், மாட்டுச்சாணம், கொடுக்காப்புளி, பதஞ்சலி பாபா ரம்தேவ் கொரோனில் என தடுப்பு மருந்துகளாக முன்னிறுத்தி வலதுசாரிகள் தொடர்ந்து மக்களை முட்டாள்தனமான கருத்துக்களை பிரச்சாரம் செய்தார்கள். பொது முடக்கத்தின் போதி வெளியே வந்தவர்களை போலீஸ் லத்தி பதம் பார்த்தது.
இவ்வளவு ரணகளத்திலும் ராமர் கோவில் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார் மோடி. மயிலுக்கு உணவளித்தார். புழு பூத்த கொண்டைக்கடலையும், அரிசியும் வழங்கினார். 3 விவசாய விரோத சட்டங்களை மக்களவையில் நிறைவேற்றினார்கள். கொரோனா தடுப்பூசி இலவசம் என தேர்தல் அறிக்கையாக வெளியிட்டார்கள். விவசாய சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்களை ஒடுக்கியது மத்திய அரசு.
கும்பமேளாவில் சமூக இடைவெளி இன்றி கூட்டம் கூட அனுமதித்த பின்னர், “கொரோனா வைரசுக்கு எதிரான போரின் அடையாளமாக கும்பமேளா திகழ வேண்டும்” என மோடி பேசுகிறார். உள்நாட்டில் தடுப்புமருந்து தட்டுப்பாடாக இருக்கையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறார் மோடி. PM Cares நிதியின் முறைகேடுகளும் அரங்கேறியுள்ளது. “கரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளில் படுக்கை வசதியும் இல்லை, பரிசோதனையும் இல்லை. வென்டிலேட்டரும் இல்லை, ஆக்ஸிஜனும் இல்லை. தடுப்பூசியும் பற்றாக்குறையாக இருக்கிறது. ஆனால், போலித்தனமாக தடுப்பூசி திருவிழா நடத்துகிறார்கள். மிகப்பெரிய அளவில் நன்கொடை பெறப்பட்டு உருவாக்கப்பட்ட பிஎம் கேர்ஸ் நிதி என்ன ஆனது?” என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற மருத்துவமனையில் சேர மக்கள் வீதிகளில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இடுகாடுகளில் டோக்கன் முறை பின்பற்றப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், 5 மாநில தேர்தல்களும் படு ஜோராக மாநாடுகளை நடத்தினார். நடைபெற்ற கும்பமேளாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற்து ஒரு `சூப்பர் ஸ்ப்ரெட்டர்' நிகழ்வு. இந்துத்துவ அரசியலை முன்னிறுத்தி மாபெறும் கொள்ளை நோயினை நாடு முழுவதும் பரப்ப காரணமாக இருந்த ஒருங்கிணைப்பாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் மோடி அரசு எடுக்கவில்லை. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு முக்கியத்துவம் தருகிறது மத்திய அரசு. கொரோனா லாக்டவுனில் மோடிக்கு வளர்ந்த தாடி அளவிற்கு கூட இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடையவில்லை.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,59,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,53,21,089 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,761 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,80,530 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த தவறிய பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்று கேட்டு #ResignModi என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்தியர்கள் செய்த மிகப்பெரிய தவறு அவரை இரண்டாவது முறையாக பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுத்ததுதான். அவரை இரண்டாவது முறையாக பிரதமராக்க காரணமானவர்கள் அனைவரும் குற்றவாளிகள், தற்போதைய நெருக்கடிக்கு சரியான பதில் மோடி ராஜினாமா செய்வதுதான்.
கொரோனா முடிந்துவிட்டதாக நம்மை நம்ப வைத்த நரேந்திர மோடி தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு வினியோகம் செய்ய ஆரம்பித்தார். ஆக்ஸிஜன், மருந்துகளை சேமித்து வைக்கவில்லை. இரண்டாவது அலைக்கு மோடி தயாராகவில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை அந்த ஹேஷ்டேக்கில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
Tr Gayathri Srikanth / Written on Apr 20, 2021
கருத்துகள்
கருத்துரையிடுக