பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனியார்மயமாக்கும் முயற்சி!
இந்திய பொதுத் துறை நிறுவனங்களின் வளர்ச்சிக்கு எந்தவித உதவியும் செய்யாத மத்திய அரசு, தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல்வேறு எண்ணிலடங்கா சலுகைகளை கொடுத்து பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மூடு விழா நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தற்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. பொதுத் துறை நிறுவனங்களின் வசம் உள்ள நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் சூழ்ச்சியிலும் ஈடுபட்டுள்ளது.
இந்தியாவில் ஜியோ வந்த பின்னர் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சில பின்னடைவை சந்தித்தன. அதன் எதிரொலி அனைத்து வாடிக்கையாளர்களிடமும் தெரிந்தது. நீண்ட நாட்களாக ஒரே சிம் கார்டை பயன்படுத்தி வந்தவர்கள் கூட, டேடா மற்றும் போன் பேசுவதற்காக ஜியோ சிம் கார்டுகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அம்பானியின் அதிரடி ஆஃபரே இதற்கு காரணம்.
டேடாக்களை இலவசமாக அள்ளிக்கொடுத்து அதன்மூலம் வாடிக்கையாளர்களை பிடித்தவர் அம்பானி. இன்னும் அவரது ஆஃபர்களில் இருந்து வாடிக்கையாளர்களால் மீளமுடியவில்லை. தற்போதும் குறைந்த விலைக்கு டேடா கிடைக்கிறது என ஜியோவை கோடிக்கணக்கானோர் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
பிஎஸ்என்எல் 2ஜி/3ஜி சேவைகளையே தற்போது வழங்கி வருகிறது. ஏர்டெல், வோடாபோன் மற்றும் ஜியோ நிறுவனங்கள் 4ஜி அடுத்து 5ஜி என சென்றுக்கொண்டிருக்கும் போது பிஎஸ்என்எல் 3ஜி-யை வைத்து போட்டியை சமாளிக்க முடியவில்லை. இன்டர் யூசேஜ் என்று சொல்லக்கூடிய ஒரு நெட்வொர்கிலிருந்து இன்னொரு நெட்வொர்க் பேச அந்த இணைப்புக்கு ஒரு நிமிடத்திற்கு 14 பைசா அனைத்து நெட்வொர்க்கும் செலுத்த வேண்டும். ஆனால் இதுலும் ஜியோவிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு ஒரு நிமிடத்திற்கு 6 பைசாவாக குறைக்கப்பட்டது. இதே சேவைக்கு சலுகையை TRAIயிடம் எதிர்ப்பார்த்த ஏர்டெல் மற்றும் வோடாபோனிற்கு ஏமாற்றமே மிச்சம்.
மார்ச் 2019 நிலவரப்படி 1 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை பெற்றிருக்கிறது ஜியோ. 1,50,000 கோடி முதலீடு செய்ததில் 1,25,000 கோடி வங்கியிலேயே கடன் பெற்று, நரேந்திர மோடியையே விளம்பர தூதராக்கி இன்று மற்ற நெட்வொர்குகளை பின்னுக்குத்தள்ளி இலவசம் இலவசம் என்று கூறி பல குடும்பங்களின் வாழ்க்கையையும் பொதுத்துறை நிறுவனத்தை லாபகரமாக கொண்டு செல்லமுடியாமல் திணறுவதற்கும் மோடியே முழு பொறுப்பேற்க வேண்டும்.
நாடு முழுவதும் 1,00,000 டவர்களில் 8000 டவர்கள் மூடப்படும் நிலையில் உள்ளது. இதில் 550 டவர்கள் மின்சார கட்டணம் செலுத்தாததால் மூடப்பட உள்ளது. வெறும் 10 லட்ச ரூபாய் இருந்தால் 550 டவர்களை இயக்க முடியும். ஜெனரேட்டர்கள் பயன்படுத்த டீசல் வாங்க கூட காசில்லாமல் தன் பொலிவை இழந்து வருகிறது பிஎஸ்என்எல்.
வாடிக்கயைாளர்களை கழுத்தைபிடித்து வெளியேற்றுவதைப் போல, தொடர்ந்து மூடப்போகிறோம் என்று கூறி மக்களை ஜியோவிற்கு மறைமுகமாக சந்தையை மாற்றியமைக்கிறது மத்திய அரசு.
பிஎஸ்என்எல் மக்கள் சொத்து. நம் பொதுத்துறை நிறுவனம் அதனை மீட்டெடுக்க உறுதியுடன் போராட வேண்டியது அவசியம். நாளை நாம் அனைவரும் பயன்படுத்தும் கருவி ஒன்று தனியார் வசம் இருந்தால் நாம் இன்று இலவசமாக அனுபவிப்பதும் அதிகமாக பணம் கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். எச்சரிகை!
Tr Gayathri Srikanth / Written on Jul 2, 2019
கருத்துகள்
கருத்துரையிடுக