இடுகைகள்

புதுச்சேரி கலைமாமணி விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெண் ஆளுமைகள் புறக்கணிப்பு?!

படம்
புதுச்சேரி கலைமாமணி விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெண் ஆளுமைகள் புறக்கணிப்பு?! புதுச்சேரி மாநிலத்தில் இயல், இசை, நாடகம், நடனம், ஓவியம்- சிற்பம் மற்றும் நாட்டுப்புறக்கலை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகளும், தமிழுக்கு சிறந்த தொண்டு புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்மாமணி விருதுகளும் புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பாக வழங்கப்பட்டு வந்தது. புதுவையில் நாற்பது ஆண்டுகளுக்கு பின் அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் திரு.சந்திர பிரியங்காவின் தலைமையில் இயங்கும் கலை பண்பாட்டுத் துறையில் அறிவிக்கப்படும் கலைமாமணி விருதுகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருப்பது வேதனையின் உச்சம்.  பத்தாண்டுகள் கழித்து விருது அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் கலைக்கு சேவையாற்றிக் கொண்டிருக்கும் பெண் ஆளுமைகளை விருதுக்கு தேர்ந்தெடுக்காதது ஏன்? ஆளுமை பெண்கள் பலர் இருந்தும், அனுபவம் வாய்ந்தவர்களையும் தகுதியானவர்களையும் புறக்கணித்துள்ளது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. தமிழுக்கும் கலைக்கும் பேச்சு, மொழி என பல்வேறு துறைகளில் குடும்பம், சமூகம் என

நீயும் அயலி! நானும் அயலி!

படம்
நீயும் அயலி! நானும் அயலி! அயலி - ஜீ வெப்சீரியஸில் வெளிவந்திருக்கும் இணையத்தொடர்.  அயலி என்கிற பெண் தெய்வத்தை வணங்கும் ஊர்மக்கள், தங்களது பெண்பிள்ளைகள் பருவமெய்தியதும் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது என்றும் பூப்பெய்திய உடனே திருமணம் செய்துவிட வேண்டுமென்றும் கட்டுப்பாடு வைத்திருக்கிறார்கள். பல நூறு ஆண்டுகளாகத் தொடரும் அந்தப்பழக்கத்தால் பள்ளி இடைநிற்றல், சிறு வயது திருமணங்கள், இளம் விதவைகள் என பல்வேறு பாதிப்புகளையும் ஆணாதிக்கங்களையும் அந்த ஊர்ப் பெண்கள் சந்திக்கிறார்கள். இந்த கட்டமைப்புகளில் இருந்து அக்கிராமத்து பெண்கள் மீண்டெழுகிறார்களா இல்லையா என்பது தான் மீதிக் கதை. திராவிடத்தின் சாதனைகளை விளக்கும் வெப்சீரிஸ் #அயலி. தாய் வழி சமூகத்தில் பிறந்த நாம் வேட்டைக்குழுக்களை வழிநடத்தியவர்களாக பெண்கள் இருந்திருக்கிறார்கள். இன்றும் ஊரின் எல்லைகளிலும் ஊரின் மையத்திலும் ஒரு பெண் தெய்வமே இறைவியாக வணங்கப்படுகிறாள். பல கோடி குடும்பங்களில் வழிபாட்டிற்கு உரியவளாக ஒரு பெண்ணே குலதெய்வமாக இருந்திருக்கிறாள். வற்றாத உயிரோட்டமான நதிகளின் பெயர்கள் முதல் மலைகளின் பெயர்கள் வரை பெண்களின் பெயரையே பார்க்க முடிகிறத

புனிதத்தின் பெயரால் மனித்தன்மை இழக்கும் சங்கிகள்!

படம்
புனிதத்தின் பெயரால் மனித்தன்மை இழக்கும் சங்கிகள்! - #சுதந்திரம் வார இதழ்  சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா, "நீ பார்சியாக இல்லையெனில், கிறிஸ்தவனாக இல்லையெனில், இஸ்லாமியராக இல்லையெனில், நீ ஒரு இந்துவாகத்தான் இருக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? இந்துவாக இருக்கின்ற வரை நீ சூத்திரன், சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன், இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன், இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன், எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள், எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள்? இந்த கேள்விகளை முன் வைத்தால் தான் அது சனாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும்" என்று சனாதனத்திற்கு எதிரான உரிமைக்குரலை பதிவு செய்திருந்தார். இந்நிலையில், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை,  இந்து முன்னணி,  முதல் காங்கிரஸ் அமெரிக்கை நாராயணன் வரை எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் திடீர் சனாதன எதிர்ப்புகளையும் சீமான் பதிவு செய்தார். தொடர்ந்து சமூக வலைதளத்தில் வைரலாக

மாநில அந்தஸ்தும் புதுச்சேரியும்!

படம்
மாநில அந்தஸ்தும் புதுச்சேரியும்! புதுச்சேரியில் நிதி, வேலைவாய்ப்பு, தொழில், வரி, கடன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு அதிகாரமின்மை என இங்கு நிலவும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மூல முதற்காரணம் மாநில அந்தஸ்து இல்லாமை. அது குறித்து நடந்த சம்பவங்களின் கோர்வையை மக்களின் பார்வைக்கு வைக்கிறேன். அகில இந்திய என்ஆர் காங்கிரஸ் கட்சியின் 11-ம் ஆண்டு தொடக்க விழா ஈசிஆர் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் பிப். 7 2021ல் கொண்டாடப்பட்ட போது  என்.ரங்கசாமி கலந்து கொண்டு, மாநில அந்தஸ்துக்காக தேர்தலைப் புறக்கணிக்க நாங்கள் தயார் நீங்கள் தயாரா என அனைத்து கட்சிகளுக்கும் சவால் விடுத்தார். மாநில அந்துஸ்துக்காக டெல்லி சென்று மத்திய அரசை வலியுறுத்த வருமாறு ரங்கசாமிக்கு அப்போது சமூக நலத்துறை அமைச்சராக இருந்த கந்தசாமியும்  அழைப்பு விடுத்தார்.  மாநில அந்தஸ்து பெறும் வரை புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை அனைத்து கட்சியினரும் புறக்கணிக்க முன்வந்தால் புதுச்சேரி மக்களின் நலனிற்காக திமுக தலைவரின் அனுமதியுடன் அதில் திமுகவும் பங்கேற்கும் என புதுவை மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவாவும் தெரிவித்தார். தேர்தல் ப

பெண்களின் அலமாரியில் உங்களுக்கு என்ன வேலை?

படம்
புதுச்சேரியில் தொடர்ந்து பெண்கள் அணியக்கூடிய ஆடையை பற்றிய விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதனை முன்வரிசையில் நின்று மறுதளித்து பேச வேண்டிய பொறுப்பு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பொறுப்பற்ற முறையில் பெண்களின் ஆடை மீதான விமர்சனங்களை முன் வைத்தும் இரவு நேரங்களில் பெண்கள் வெளியே வரக்கூடாது கரடி சிங்கம் கடித்துவிடும் என்று மாணவர்கள் மத்தியில் பேசியது, அதிமுகவின் புதுச்சேரி நிர்வாகி அன்பழகனும் சுற்றுலாப்பயணிகளை குறி வைத்து அவர்களின் அடை சுதந்திரத்தின் மீது தனது வக்ர பார்வைகளை கண்டனம் என்ற பெயரில் பதிவு செய்தது, ஹைதராபாத்திலிருந்து ஐடி பெண்கள் தங்கள் ஆண் நண்பர்களுடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த போது அரைகுறையாக ஆடை உடுத்திக் கொண்டு ஆசிரம பகுதிகளில் உலா வரக்கூடாது என்று சொன்ன போலீஸ் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலாப்பட்டிற்கு மாற்றம் செய்து தனது நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டது புதுச்சேரி காவல்துறை.  ஒரு பெண் ஆளுநராக இருக்கும் போதும், ஒரு பெண் மூத்த காவல் கண்காணிப்பாளராக இருக்கும் போதும் பெண்களுக்கான நியாயமும்  நீதியும் மறுக்கப்படுவது மிகுந்த வலியையும் வேதன

கற்பகவிருட்சம்

படம்
கற்பகவிருட்சம்! உணவு என்பது உயிர்க்கு அமுது. ‘பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக என ஆதிரை இட்டனள் ஆருயிர் மருந்து’ என்பது மணிமேகலை. இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்’ எனும் வள்ளுவரின் வாக்கையும் சொல்வது சுலபம். ‘வீடு தோறும் இரந்து பசி அறாது அயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்’ என்கிறார் வள்ளலார். செங்கல்பட்டு பக்கத்துல சின்ன கிராமத்தில மண்ணெண்ணெய் சில்லரை வியாபாரம் தான் அப்பாவின் தொழிலாக இருந்தது. அப்பொழுது மண்ணெண்ணெய் பயன்படுத்திக் கொண்டிருந்த எல்லோரும் சிலிண்டருக்கு மாறிக் கொண்டிருந்த சமயம். ஊரில் யார் இறந்தாலும் எரிக்கும் வழக்கமுடையோர் எங்களிடம் தான் மண்ணெண்ணெய் வாங்கி செல்வார்கள். ஏழை குடும்பங்களுக்கு சில்லரை வியாபாரமும், ஹோட்டல்களுக்கு மட்டுமே வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. எல்லோரும் ஒரு ஹால் கிச்சன் கொண்ட நான்கு தனி ரூம்கள் வாடகைக்கு இருந்தது. ஆனால் குடியிருக்க யாருமில்லை.   மண்ணெண்ணெய் விலை ஏறியதால் அதனை வாங்கி விற்பதற்கு மிகவும் சிரமப்பட்டார். பல்வேறு பொருளாதார நெறுக்கடிக்களால் குடும்பம் வருமானமின்றி வறுமையில் சிக்கித் தவித்த காலம் அது. வீட

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடா இந்தியா?

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்... என்ற செய்தியை ஏற்கமுடியவில்லையா.... பெண்களுக்கு எதிராக குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கிறது என்பதையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்களா??? பெண் எந்த மதத்தை பெண் எந்த ஊரை சேர்ந்திருந்தாலும், பெண் எந்த சாதியை சேர்ந்திருந்தாலும், பெண் வேலை செய்யும் இடத்திலும், குடும்பத்திலும், பாலியல்ரீதியாக, பொருளாதாரரீதியாக, உளவியல்ரீதியாக, சமூகரீதியாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. உலகிலுள்ள அனைத்து பெண்களுமே ஏதோ ஒரு வகையில் யாரோ ஒருவராலாவது பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். இது ஒரே நாளில் சரி செய்ய முடியாத ஒன்று. யாரையும் சாடி யாரையும் குறை சொல்லி ஒன்றும் நிகழப்போவது கிடையாது. இது ஒரு தொடர் கதை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியவர்கள் கல்வியாளர்களும் ஆட்சியாளர்களும்.... பெண் பற்றிய புரிதல், சமூக பாலின வேறுபாடு, சமூகத்தின் பார்வையை மாற்றி அமைக்க வேண்டியது நமது கடமையும் கூட.... பெண் அல்லது ஆண் இருவரும் சேர்ந்ததே சமூகம். இந்த சமூகப்பிணைப்பை இளம் தலைமுறையினருக்கு கற்றுத்தர வேண்டிய அவசியமும்