பெண்களின் அலமாரியில் உங்களுக்கு என்ன வேலை?


புதுச்சேரியில் தொடர்ந்து பெண்கள் அணியக்கூடிய ஆடையை பற்றிய விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதனை முன்வரிசையில் நின்று மறுதளித்து பேச வேண்டிய பொறுப்பு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பொறுப்பற்ற முறையில் பெண்களின் ஆடை மீதான விமர்சனங்களை முன் வைத்தும் இரவு நேரங்களில் பெண்கள் வெளியே வரக்கூடாது கரடி சிங்கம் கடித்துவிடும் என்று மாணவர்கள் மத்தியில் பேசியது, அதிமுகவின் புதுச்சேரி நிர்வாகி அன்பழகனும் சுற்றுலாப்பயணிகளை குறி வைத்து அவர்களின் அடை சுதந்திரத்தின் மீது தனது வக்ர பார்வைகளை கண்டனம் என்ற பெயரில் பதிவு செய்தது, ஹைதராபாத்திலிருந்து ஐடி பெண்கள் தங்கள் ஆண் நண்பர்களுடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த போது அரைகுறையாக ஆடை உடுத்திக் கொண்டு ஆசிரம பகுதிகளில் உலா வரக்கூடாது என்று சொன்ன போலீஸ் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலாப்பட்டிற்கு மாற்றம் செய்து தனது நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டது புதுச்சேரி காவல்துறை. 

ஒரு பெண் ஆளுநராக இருக்கும் போதும், ஒரு பெண் மூத்த காவல் கண்காணிப்பாளராக இருக்கும் போதும் பெண்களுக்கான நியாயமும்  நீதியும் மறுக்கப்படுவது மிகுந்த வலியையும் வேதனையையும் தருகிறது. பெண்களின் மீதான பார்வையை மாற்றி அமைக்க வேண்டியவர்களை மவுனமாக கடந்து செல்வதும், பெண்களுக்கு எதிராக பேசுவதும் தொடர் கதையாகி வருகிறது. கடந்த காலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்து பல வழக்குகளை கையாண்டவர் Dr.வித்யா ராம்குமார், தற்போது வரதட்சணை தடுப்பு பிரிவு  சேர்மனாகவும் இருந்து வருகிறார். அவரது முகநூல் கணக்கில் அவரது தோழியின் பதிவுக்கு ஒரு ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர் நாகரிகமற்ற முறையில் பொதுத்தளத்தில் பெண்ணின் உடை மீதான விமர்சனத்தை முன் வைத்து தனிநபர் தாக்குதல் செய்து, இன்று 3 மாதம் சிறை தண்டனையும் ரூ.2000/- அபராதம் பெற்றுள்ளது வேதனையளிக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக இருக்கும் ஒரு பெண் சேர்மன் என்பதனால் வழக்கு தீர்கமாக பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை துரிதமாக எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுவே சாமானிய பெண் ஒருவர் புகார் அளித்திருந்தால் அபியூஸ் செய்தவருக்கு ஆதரவாக இருந்து கொண்டு, பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுத்திருக்கமாட்டார்கள். மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் பெண்களின் மீதான பார்வைகளை பதிவு செய்ய வேண்டிய கண்ணியமிக்க சமூகத்தை உருவாக்காமல் பெண்கள் முன்னேற்றம் என்பது ஏற்படாது. சாத்திரங்களும் பழக்கவழக்க சட்டங்களும் பெண்களை அடிமைப்படுத்தியே வைத்திருந்தது. அடிமைதளங்களிலிருந்து பெண்கள் மீண்டெழுந்து சிறகை விரித்து தங்கள் வானில் வெற்றிகரமாக பறக்கத்துவங்கும் போது அவர்களின் சிறகை உடைத்து கூண்டிற்குள் அடைக்கும் முயற்சிகளை செய்வதை தடுக்க வேண்டும். அனைவரும் சமூக பொறுப்புடன் பெண்களின் மீதான ஆடை விமர்சனங்களை வைப்பதை தவிர்க்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நீயும் அயலி! நானும் அயலி!

தாலி இழவிற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது?

புதுச்சேரி கலைமாமணி விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெண் ஆளுமைகள் புறக்கணிப்பு?!