புனிதத்தின் பெயரால் மனித்தன்மை இழக்கும் சங்கிகள்!

புனிதத்தின் பெயரால் மனித்தன்மை இழக்கும் சங்கிகள்! - #சுதந்திரம் வார இதழ் 

சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா, "நீ பார்சியாக இல்லையெனில், கிறிஸ்தவனாக இல்லையெனில், இஸ்லாமியராக இல்லையெனில், நீ ஒரு இந்துவாகத்தான் இருக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? இந்துவாக இருக்கின்ற வரை நீ சூத்திரன், சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன், இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன், இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன், எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள், எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள்? இந்த கேள்விகளை முன் வைத்தால் தான் அது சனாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும்" என்று சனாதனத்திற்கு எதிரான உரிமைக்குரலை பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை,  இந்து முன்னணி,  முதல் காங்கிரஸ் அமெரிக்கை நாராயணன் வரை எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் திடீர் சனாதன எதிர்ப்புகளையும் சீமான் பதிவு செய்தார். தொடர்ந்து சமூக வலைதளத்தில் வைரலாக உள்ள ஆ.ராசாவின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், புதுச்சேரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தொடர்ந்து ஏற்றத்தாழ்வுகளை கற்பிக்கும் மநு நூலின் கொளுத்தும் போராட்டத்தை அறிவித்து முறையாக காவல்துறையிடம் அனுமதி பெற்று ராஜா தியேட்டர் சிக்னல் அருகே பெண்கள் குழந்தைகளுடன் தபெதிக தோழர்கள் ஆர்பாட்டத்தை திட்டமிட்டபடி நடத்தி கொண்டிருந்த வேளையில், போராட்டக்காரர்களை அமைதியாக பேருந்தில் ஏற்றி முடிக்க போகும் நேரத்தில் புதுச்சேரி காவல்துறையிடம் எந்த அனுமதியுமில்லாமல் 30 பேர் கொண்ட இந்து முன்னணி, பாஜக சங்கிகள் கும்பல் சேர்த்து கொண்டு 'ஜெய் ஸ்ரீராம்' என கோஷமிட்டும் தந்தை பெரியார் திகவினரை அவதூறாக பேசியும், கருங்கற்களை வீசியுள்ளனர். இதனால் பொதுசொத்துக்கு சேதம் ஏற்படுத்தி பொது அமைதியை சீர்குலைத்து குந்தகம் விளைவித்து கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்தனர். ராஜா திரையரங்கம் அருகே போர்களம் போல காட்சியளித்தது. மநு நூலை போராட்டக்காரர்கள் எரித்தால் அதனை அணைக்க தண்ணீர் வாளியை காவல்துறையினர் கொண்டு வந்திருந்தனர். அந்த வாளியையும் எடுத்து தடாலடியாக தூக்கி வீசி எதிர்தரப்பினரை சங்கிகள் வெறுப்பேற்றிக் கொண்டிருந்த வேளையில் காவல்துறை கையில் லத்தி ஏதும் இன்றி சங்கிகளை கையால் தடுத்து தடுத்து பிடித்து செல்லமாக கண்டித்து கொண்டிருந்தனர். தபெதிகவினர் பேருந்துக்குள் இருந்து கொண்டே கண்டனங்களை பதிவு செய்தனர்.

உள்துறையை தன் கட்டுபாட்டில் வைத்திருக்கும் பாஜக எவ்வித அச்சமுமின்றி தான்தோன்றித்தனமாக புதுச்சேரி காவலர்களையும் மீறி கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட சங்கிகள் மீது தடியடி நடத்தி கலவர சங்கிகளை துறத்தி அடிக்காமல் அதிகாரிகளை அழைத்து மிரட்டும் வேலையை சபாநாயகர் அலுவலகம் செய்யதுள்ளது மாண்பை மீறிய செயலாகும். தொடர்ந்து நடுநிலை தவறும் சபாநாயகர் பதவி விலக வேண்டும். கலவரம் நடத்த முயன்ற இந்து முன்னணி பாஜகவினர் மீது குண்டர் சட்டம் பாய வேண்டும். தபெதிகவினர் மீது கடுமையான பிரிவுகளில் வழக்கு போடும்படி கெடுபிடிகள் செய்வது பாஜகவிற்கு ஏற்படுயதல்ல.

வீதியெங்கும் வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை எல்லாம் கிழித்து தொங்கவிட எவ்வளவு நேரம் ஆகும்? பதிலுக்கு பதில் என்று எல்லோரும் சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டால் புதுச்சேரியின் அமைதி சீர்கெடும். மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளும் சமூக அமைப்புகளும் போராட்டம் நடத்தும் போதெல்லாம் கூடுமானவரை புதுச்சேரி காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்குவதை மரபாக வைத்திருக்கிறார்கள். காவல்துறையில் போதிய ஆட்கள் இல்லாமல் இருக்கும் சூழலை புரிந்து கொள்ளும் எங்களின் பொறுமையை சோதித்து பார்க்கும் கலவர சங்கிகளே எச்சரிக்கை! இது உத்திர பிரதேசம் அல்ல... புதுச்சேரி! 1970களில் நடந்த புரட்சி வரலாற்றை புரட்டிப்பார்!

Tr Gayathri Srikanth 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நீயும் அயலி! நானும் அயலி!

தாலி இழவிற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது?

புதுச்சேரி கலைமாமணி விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெண் ஆளுமைகள் புறக்கணிப்பு?!