பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடா இந்தியா?
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்... என்ற செய்தியை ஏற்கமுடியவில்லையா.... பெண்களுக்கு எதிராக குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கிறது என்பதையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்களா??? பெண் எந்த மதத்தை பெண் எந்த ஊரை சேர்ந்திருந்தாலும், பெண் எந்த சாதியை சேர்ந்திருந்தாலும், பெண் வேலை செய்யும் இடத்திலும், குடும்பத்திலும், பாலியல்ரீதியாக, பொருளாதாரரீதியாக, உளவியல்ரீதியாக, சமூகரீதியாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. உலகிலுள்ள அனைத்து பெண்களுமே ஏதோ ஒரு வகையில் யாரோ ஒருவராலாவது பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். இது ஒரே நாளில் சரி செய்ய முடியாத ஒன்று. யாரையும் சாடி யாரையும் குறை சொல்லி ஒன்றும் நிகழப்போவது கிடையாது. இது ஒரு தொடர் கதை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியவர்கள் கல்வியாளர்களும் ஆட்சியாளர்களும்.... பெண் பற்றிய புரிதல், சமூக பாலின வேறுபாடு, சமூகத்தின் பார்வையை மாற்றி அமைக்க வேண்டியது நமது கடமையும் கூட.... பெண் அல்லது ஆண் இருவரும் சேர்ந்ததே சமூகம். இந்த சமூகப்பிணைப்பை இளம் தலைமுறையினருக்கு கற்றுத்தர வேண்டிய அவசியமும் ...