பெண்களின் அலமாரியில் உங்களுக்கு என்ன வேலை?

புதுச்சேரியில் தொடர்ந்து பெண்கள் அணியக்கூடிய ஆடையை பற்றிய விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதனை முன்வரிசையில் நின்று மறுதளித்து பேச வேண்டிய பொறுப்பு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பொறுப்பற்ற முறையில் பெண்களின் ஆடை மீதான விமர்சனங்களை முன் வைத்தும் இரவு நேரங்களில் பெண்கள் வெளியே வரக்கூடாது கரடி சிங்கம் கடித்துவிடும் என்று மாணவர்கள் மத்தியில் பேசியது, அதிமுகவின் புதுச்சேரி நிர்வாகி அன்பழகனும் சுற்றுலாப்பயணிகளை குறி வைத்து அவர்களின் அடை சுதந்திரத்தின் மீது தனது வக்ர பார்வைகளை கண்டனம் என்ற பெயரில் பதிவு செய்தது, ஹைதராபாத்திலிருந்து ஐடி பெண்கள் தங்கள் ஆண் நண்பர்களுடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த போது அரைகுறையாக ஆடை உடுத்திக் கொண்டு ஆசிரம பகுதிகளில் உலா வரக்கூடாது என்று சொன்ன போலீஸ் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலாப்பட்டிற்கு மாற்றம் செய்து தனது நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டது புதுச்சேரி காவல்துறை. ஒரு பெண் ஆளுநராக இருக்கும் போதும், ஒரு பெண் மூத்த காவல் கண்காணிப்பாளராக இருக்கும் போதும் பெண்களுக்கான நியாயமும் நீதியும் மறுக்கப்படுவது மிகுந்த வலியை...