இடுகைகள்

ஜனவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீயும் அயலி! நானும் அயலி!

படம்
நீயும் அயலி! நானும் அயலி! அயலி - ஜீ வெப்சீரியஸில் வெளிவந்திருக்கும் இணையத்தொடர்.  அயலி என்கிற பெண் தெய்வத்தை வணங்கும் ஊர்மக்கள், தங்களது பெண்பிள்ளைகள் பருவமெய்தியதும் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது என்றும் பூப்பெய்திய உடனே திருமணம் செய்துவிட வேண்டுமென்றும் கட்டுப்பாடு வைத்திருக்கிறார்கள். பல நூறு ஆண்டுகளாகத் தொடரும் அந்தப்பழக்கத்தால் பள்ளி இடைநிற்றல், சிறு வயது திருமணங்கள், இளம் விதவைகள் என பல்வேறு பாதிப்புகளையும் ஆணாதிக்கங்களையும் அந்த ஊர்ப் பெண்கள் சந்திக்கிறார்கள். இந்த கட்டமைப்புகளில் இருந்து அக்கிராமத்து பெண்கள் மீண்டெழுகிறார்களா இல்லையா என்பது தான் மீதிக் கதை. திராவிடத்தின் சாதனைகளை விளக்கும் வெப்சீரிஸ் #அயலி. தாய் வழி சமூகத்தில் பிறந்த நாம் வேட்டைக்குழுக்களை வழிநடத்தியவர்களாக பெண்கள் இருந்திருக்கிறார்கள். இன்றும் ஊரின் எல்லைகளிலும் ஊரின் மையத்திலும் ஒரு பெண் தெய்வமே இறைவியாக வணங்கப்படுகிறாள். பல கோடி குடும்பங்களில் வழிபாட்டிற்கு உரியவளாக ஒரு பெண்ணே குலதெய்வமாக இருந்திருக்கிறாள். வற்றாத உயிரோட்டமான நதிகளின் பெயர்கள் முதல் மலைகளின் பெயர்கள் வரை பெண்களின் பெயரையே பார்க்க முடி...