இடுகைகள்

ஆகஸ்ட், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாநில அந்தஸ்தும் புதுச்சேரியும்!

படம்
மாநில அந்தஸ்தும் புதுச்சேரியும்! புதுச்சேரியில் நிதி, வேலைவாய்ப்பு, தொழில், வரி, கடன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு அதிகாரமின்மை என இங்கு நிலவும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மூல முதற்காரணம் மாநில அந்தஸ்து இல்லாமை. அது குறித்து நடந்த சம்பவங்களின் கோர்வையை மக்களின் பார்வைக்கு வைக்கிறேன். அகில இந்திய என்ஆர் காங்கிரஸ் கட்சியின் 11-ம் ஆண்டு தொடக்க விழா ஈசிஆர் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் பிப். 7 2021ல் கொண்டாடப்பட்ட போது  என்.ரங்கசாமி கலந்து கொண்டு, மாநில அந்தஸ்துக்காக தேர்தலைப் புறக்கணிக்க நாங்கள் தயார் நீங்கள் தயாரா என அனைத்து கட்சிகளுக்கும் சவால் விடுத்தார். மாநில அந்துஸ்துக்காக டெல்லி சென்று மத்திய அரசை வலியுறுத்த வருமாறு ரங்கசாமிக்கு அப்போது சமூக நலத்துறை அமைச்சராக இருந்த கந்தசாமியும்  அழைப்பு விடுத்தார்.  மாநில அந்தஸ்து பெறும் வரை புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை அனைத்து கட்சியினரும் புறக்கணிக்க முன்வந்தால் புதுச்சேரி மக்களின் நலனிற்காக திமுக தலைவரின் அனுமதியுடன் அதில் திமுகவும் பங்கேற்கும் என புதுவை மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவாவும் தெரிவித்த...